ஆங்கிலோ இந்தியனோ; ஹிந்தியனோ அல்ல – நான் இந்தியன்

தமிழ்நவிலும் சான்றோர்களே….

“இந்தியர்கள் அனைவரும் அறிந்த உலக மொழியாகவும், அனைவருக்குமான இணைப்பு மொழியாகவும் ஆங்கிலம் இருக்க, மூன்றாம் மொழியாக ஹிந்தியைப் படித்தால் தான் ஹிந்திய தேசத்தின் மீதான நமது பற்றினையும் வெளிப்படுத்தமுடியுமா? ஹிந்தியால் மட்டுமே மற்ற ஹிந்தியர்களுடன் பேசிப் பழகி நமது பாசத்தினை வெளிபடுத்தி, நட்புறவாட முடியுமா? ( 🙂 ஆங்கிலத்தால் முடியுமா என்று இவர்களிடம் கேட்டு விடக்கூடாது)
நானும் ஹிந்தியன் தான் ! நானும் ஹிந்தியன் தான் !! ஏய்! எல்லாரும் பாத்துக்கோங்க
நானும் ஹிந்தியன் தான் !!!” என்று ஹிந்தியர்களை நம்பவைக்க வேண்டுமா?”

என்று கேட்கும் மிக!! மிகத்!!! தீவிரமான தமிழ்ப்பற்றாளர்களே… 🙂

எல்லோம் போகட்டும்….

பள்ளி கல்வியில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கேட்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை? ஏன் அந்தத் துணிவு உங்களுக்கு வர மறுக்கிறது?

தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் எத்தனைப் பள்ளிகள், எத்தனை மாணவர்களுக்குத் தமிழ்வழியில் கல்வியைப் புகட்டுகின்றன?

தீதும் நன்றும் பிறர்தர வாரா

தமிழகத்தில், தமிழை இரண்டாம் மொழியாக்கியது யார்?

ஹிந்தியர்களா? ஆங்கிலேயர்களா? நீங்களா?

இழிந்த அடிமைகளான நீங்களே தமிழின் இந்த அவல நிலைக்குக் காரணம்.

50 ஆண்டுகளாக ஆட்சி செய்தும்கூடத் திராவிட ஆட்சியாளர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர மனமில்லை. பயிற்று மொழியான முதல் மொழியாக தமிழே இருக்க வேண்டும் என்று மாநில அரசைக் கேட்கத் தமிழ் வெறியர்களான உங்களுக்கும் வக்கில்லை. ( இதற்கு கலைச்சொற்களின் கடினம் என்று காரணம் வேறு!! ஏன் லத்தீனிலோ, கிரேக்கத்திலே, ஆங்கிலத்திலோ, ஜெர்மனிலோ உள்ள அறிவியல் கலைச்சொற்களை அப்படியே தமிழ் வரிவடிவத்தில் பயன்படுத்த வேண்டியதுதானே? ஏன் வலுக்கட்டாயமாக அவற்றை மாற்ற வேண்டும்?)

ஆனால் போலி மஸ்தான்களாகிய நீங்கள், ஒன்றும் நடக்காது என்று தெரிந்தே, மோடி மஸ்தானின் மத்திய அரசோடு மோதி, “ஏய்… பாத்துக்கய்யா நானும் போராளிதான்… நானும் போராளியேதான்… தமிழகத்தின் காரல் மார்க்சு… லெனினு.. சேகுவேரா… எல்லாம் நானேதானாக்கும்” என்ற ஏன் இழி புன்னகை செய்கிறீர்கள்?

இந்தக் கள்ள நாடகம் எதற்காக?

இரண்டாம் மொழியாகவும், மூன்றாம் மொழியாகவும் இந்தியும், ஆங்கிலமும் இருந்தாலென்ன? பயிற்று மொழியான முதல் மொழியாக தமிழே இருந்தாலென்ன?

மேற்கண்ட நிலையே எங்கள் பள்ளி கல்வியில் வேண்டும் என்று நீங்கள் கேட்பீர்களா? உங்களுக்கு அதற்கான வக்கிருக்கிறதா ?

(இந்தி திணிப்பு என்ற) உங்கள் கள்ளக் கோரிக்கையின் மூலமாக மறைமுகமாக “ஆங்கிலம்தான் எங்களுக்குப் பயிற்று மொழியாக வேண்டும்!” என நீங்கள் கேட்பது உங்களுக்கு புரியவே இல்லையா? அல்லது புரியாததுபோல் நடிக்கிறீர்களா?

நீங்கள் ஆங்கிலத்தைத் தூக்கிப் பிடிப்பதற்குப் பின்னால்…

நானும் ஆங்கிலேயன்… (இன்னும் கேட்டால் ஆங்கிலேயனுக்கும் நான் மேலானவன்); ஏய்… எல்லாரும் என்னையப் பாத்துக்கங்க, நானும் அங்கிலேயன் {காமடியன்} தான் என்ற மிக மட்டமான, மிக இழிந்த, மிகக் கீழ்மையான உங்கள் சிந்தனை உங்களுக்கே தெரியவில்லையா?

“அடிமை” என்று நமக்கு நாமே நம்மை நாள்தோறும் நினைவுபடுத்துவது அந்த ஆண்டானின் “ஆங்கிலமே!!!”…

தமிழ்ச்சான்றோர்கள் சம்ஸ்கிருதப் பண்டிதர்களாகவும் இருந்த இந்தத் தொன்மையான நிலத்தை ஹிந்தியா என்று நீங்கள் சொன்னால்; ஆம்… நாம் அனைவரும் ஹிந்தியர்களே… இந்தியா என்று சொன்னால்; ஆம்… நாம் அனைவரும் இந்தியர்களே…

நீங்கள் இப்படிப்பட்ட இழிந்த ஆங்கிலோ இந்தியர்களாக இருப்பதைக் காட்டிலும், ஹிந்தியர்களாக இருப்பதில் ஒன்றும் அவமானமில்லை. ஆனால் நாம் இந்தியர்களே.

மனத்தளவில் ஆங்கிலோ இந்தியர்களாக இருப்பவர்கள், தங்களைத் தாங்களே தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டும், போலியான இன அடையாளத்தைச் சூட்டிக் கொண்டும்… தமிழ்ப் பற்றையல்ல; பற்றில்லா போலி மொழிவெறியையே தூண்டிவிடுகிறார்கள்.

அந்தச் சில்லுண்டி மொழிவெறியர்கள் #முரண்தொகைவாதிகள் ….

நீங்கள்?

(தமிழ் இனம் என்று ஒன்று உண்டா? இனம் என்பதற்கான அடிப்படை அறிவில் கூறுகள் என்ன? அவற்றையெல்லாம் தமிழினம் நிறைவு செய்கிறதா? அதற்கான கூறுகள் அனைத்தும், தமிழினத்தவன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் எவனுக்கும் உண்டா?)